[X] Close

2015 முதல் 2017-ம் ஆண்டு வரையில் துணை ராணுவப் படை வீரர்கள் 400 பேர் உயிரிழப்பு


indian-army-update

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 13:53 pm
  • அ+ அ-

இந்திய - பாகிஸ்தான் எல்லை யில் பாகிஸ்தான் மற்றும் தீவிர வாதிகளின் தாக்குதலில், கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை, துணை ராணுவப் படையைச் சேர்ந்த 400 வீரர்கள் உயிரிழந் துள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச் சகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

இந்திய - பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் எல்லை தாண்டி நடத்திய தாக்குதல், தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்ட போது, கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை 400 துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் (பிஎஸ்எப்) சேர்ந்த வீரர்கள்தான் அதிகம். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பிஎஸ்எப் வீரர்கள் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் நக்சல்களுடனான மோதலின் போதும் காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டை யின் போதும் சிஆர்பிஎப் வீரர்கள் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய - பூடான் மற்றும் இந்திய - நேபாள எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சஷாத்ரா சீமா பால் படையைச் சேர்ந்த 48 வீரர்கள் கடந்த 3 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர்.

இந்திய - சீனா எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய திபெத் எல்லைப் போலீஸ் படை யைச் சேர்ந்த 40 வீரர்கள் இறந்துள் ளனர். மேலும், இந்திய - மியான்மர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைபிள்ஸ், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்களும் பலியாகி உள்ளனர்.

இவ்வாறு உள்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்துள்ளார். -

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close