[X] Close

3 வயது பேரன்; முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் காட்டிலும் பணக்காரர்


chandra-babu-naidu

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 11:45 am
  • அ+ அ-

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் காட்டிலும் அவரின் 3 வயது பேரன் பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.2.99 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருக்கும் நிலையில், அவரின் மகன் வழியில் வந்த 3 வயது பேரன் நரா தேவான்ஷுக்கு ரூ.18.71 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்ப சொத்து விவரங்களை நேற்று வெளியிட்டார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.2.99 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், சந்திரபாபு நாயுடுவின் சொத்துமதிப்பு ரூ.46 லட்சம் உயர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும் சந்திரபாபு நாயுடுவின் கடன் ரூ.5.64 கோடியில் இருந்து ரூ.5.31 கோடியாகக் குறைந்துள்ளது.

ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு ரூ. 7.75 கோடி மதிப்பில் சொகுசு பங்களா கட்டினார். அதன் மதிப்பு இந்த ஆண்டு ரூ.8.96 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநில அமைச்சரவையில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கு ரூ.21.40 கோடி சொத்துகள் உள்ளன. கடந்த ஆண்டு லோக்கேஷுக்கு ரூ.15.21 கோடி சொத்துகள் இருந்தன.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரி அவரின் குடும்பத்திலேயே பணக்காரர் ஆவார். புவனேஷ்வரியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.25.41 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.31.01 கோடியாக உயர்ந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பும் ரூ.20.90 கோடியில் இருந்து ரூ.22.35 கோடியாக உயர்ந்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மகன்வழிப் பேரனும், 3 வயதான தேவான்ஷின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு ரூ.7 கோடி உயர்ந்து ரூ.18.71 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.11.54 கோடியாகச் சொத்து மதிப்பு இருந்தது.

இது குறித்து சந்திரப்பாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான லோகேஷ் நிருபர்களிடம் கூறுகையில், “தொடர்ந்து 8-வது ஆண்டாக எங்கள் குடும்பத்தின் சொத்து விவரங்களை மக்களுக்குத் தெரிவித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close