[X] Close

குற்றம்: பலாத்காரம்; அடையாளம்: சிவப்பு டி ஷர்ட்!- பலே நபருக்கு போலீஸ் வலை


hunt-on-for-another-serial-rapist

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Nov, 2018 11:11 am
  • அ+ அ-

நவி மும்பை க்ரைம் பிராஞ்ச் போலீஸார் அண்மையில்தான் ஒரு பலாத்கார பேர்வழியை கைது செய்தனர். தற்போது இன்னொரு பலாத்கார குற்றவாளிக்கு அவர்கள் வலை விரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கடைசிவரை பல பலாத்கார குற்றங்களைச் செய்திருப்பதாக இவர் மீது வழக்கு உள்ளது. அவரைப் பிடிக்க போலீஸுக்கு உள்ள ஒரே துருப்பு சிவப்பு டி ஷர்ட். சம்பவ இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி ஆதாரங்களில் அந்த நபர் சிவப்பு டி ஷர்ட் அணிந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் இவர் மீது கார்கர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. மே மாதத்தின் சன்பதா காவல் நிலையத்திலும் ஜூலை மாதத்தில் பெலாபூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவாகியுள்ளன. தீந்தோஷி, கண்டிவல்லி போலீஸார் இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே பலாத்கார குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட ரெஹான் குரேஷிக்கும் இந்த சிவப்பு டி ஷர்ட் குற்றவாளிக்கும் ஒரு தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குரேஷி தனது இச்சைக்கான பெண்ணையோ அல்லது குழந்தையையோ தேர்வு செய்தவுடன் அவர்களிடம் ஏதாவது பொய்யுரைத்து மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பலாத்காரம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். பல சிசிடிவி ஆதாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன.

அதேபோல்தான் தற்போது தேடப்படும் சிவப்பு டிஷர்ட் நபரும் பலியாகும் நபர்களிடம் சிலிண்டர் விநியோகிக்கும் நபர் போல் அடையாளம் காட்டிக்கொண்டு சிலிண்டரை எடுக்க உதவுமாறு கூறி ஏமாற்றி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துவந்திருக்கிறார்.

இருவருமே சிக்கும் நபர்களை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.

குரேஷியின் செயலையே இந்த நபரும் பின்பற்றியிருக்கக்கூடும். சிவப்பு டிஷர்ட் நபரை கைது செய்த பின்னரே எத்தனை பலாத்கார சம்பவங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

க்ரைம் பிராஞ்சு போலீஸார் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிவப்பு டிஷர்ட் நபரின் புகைப்படத்தை பல்வேறு கேஸ் விநியோக ஏஜென்சிகளிலும் கொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலோஜா சிறையில் உள்ள குரேஷி மீது 19 வழக்குகள் உள்ளன. அவற்றில் இரண்டு பலாத்கார வழக்குகள். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close