[X] Close

தமிழக – கேரள எல்லையில் பஸ்கள் நிறுத்தம்; பாஜக போராட்டம் எதிரொலி; பயணிகள் அவதி


bjp-kerala-bus

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 08:28 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

பாஜகவின் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக – கேரள எல்லையிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றன.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது ஆதரவாளர்களுடன் சபரிமலை வந்தார். அவரது வாகனத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸார், விஐபி என்பதால் அவரது வாகனம் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப்படும் என்றும் ஆதரவாளர்கள் அரசு வாகனத்தில்தான் செல்ல வேண்டும் என்றும் கூறினர்.

இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸ் அதிகாரி யதீஷ் சந்திரா ஐ.பி.எஸ்., அங்கு வந்தார்.

அவரும் பொன்.ராதாகிருஷ்ணனும் பேசிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீஸ் அதிகாரி மரியாதைக் குறைவாகப் பேசினார் என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து தமிழக எல்லையான குமரியில், போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

கேரளத்தில் இருந்து கன்யாகுமரிக்கு வரும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. பாஜகவினர் மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து எல்லையிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டார்கள்.

குமரியில் இருந்து கேரளா செல்பவர்களும் கேரளத்தில் இருந்து குமரிக்கு வருபவர்களும் இதனால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 2வது நாளாக இந்த நிலை தொடர்கிறது.

இன்றும் தமிழக – கேரள எல்லையிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் ரொம்பவே அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close