[X] Close

தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த குடும்பத்துக்கு உதவும் டெல்லி போலீஸார்


delhi-police-department

பிரதிநிதித்துவப் படம்

  • kamadenu
  • Posted: 21 Nov, 2018 12:39 pm
  • அ+ அ-

டெல்லியின் சங்கம் விஹார் காவல் நிலையப்பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த வழக்கறிஞர் ஜிதேந்திரா. இவர், தன் குடும்பத்தை காக்க வருமானம் இன்றி வறுமையில் வாடி உள்ளார். இதனால், மனம் உடைந்த அவர் மனைவி மீனாட்சி மற்றும் 11, 9 வயதில் இரு மகள்களை கொன்று தானும் தற்கொலை செய்ய முயன்றார். இதில், ஜிதேந்திராவுடன் 9 வயது மகள் பலியாக மற்ற இருவரும் உயிர் பிழைத்தனர்.

கடந்த மார்ச் 2-ல் வந்த ஹோலி பண்டிகை அன்று நடந்த இந்த சம்பவத்தின் வழக்கை பதிவு செய்த சங்கம் விஹாரின் ஆய்வாளர் உபேந்திரா சிங் விசாரணை நடத்தினார். இதில், மகளுடன் இருந்த மீனாட்சி, தம்மை ஆதரிக்க எவரும் இல்லை என காவல் நிலையத்தில் அழுதுள்ளார். இதனால், அதன் காவலர்கள் அவர்கள் வாழ்க்கைக்கு உதவ முன்வந்தனர். இதை கேள்விப் பட்ட அருகிலுள்ள ஜாமியா காவல் நிலைய போலீஸாரும் உதவிக்கு வந்தனர். தற்போது இரு காவல் நிலையங்களின் 25 காவலர்கள், பாதிக்கப்பட்ட வர்களின் வீட்டு வாடகை மற்றும் மகளின் பள்ளிக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றுக்காக மாதம் ரூ.200 அளித்து உதவி வருகின்றனர்.

இதுபோல், மக்களுக்கு உதவுவதில் ஆய்வாளர் உபேந்திரா டெல்லியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். தற்போது அவர் பணியாற்றும் ஜாமியா காவல்நிலையப் பகுதியில் பல வருடங்களாக 52 பேர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தனர். ஒருமுறை அவர்களை கைது செய்த உபேந்திரா, அனைவரிடமும் பேசி திருந்தி வாழ வகை செய்துள்ளார். டெல்லியின் ‘மதர் டெய்ரி’ பால் பண்ணையின் விற்பனையாளர் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளார். இதனால், அந்த 52 பேரும் கள்ளச்சாரயம் விற்பதை நிறுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனால், ஆய்வாளர் உபேந்திரா டெல்லிவாசிகளால் பாராட்டப்பட்டு வருகிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close