[X] Close

பொதுத் தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என பாஜக, ஆர்.எஸ்.எஸுக்கு தெரியும்!- ராகுல்


bjp-rss-know-they-will-not-win-next-lok-sabha-election-claims-rahul

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Nov, 2018 16:58 pm
  • அ+ அ-

2019 பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு நன்றாக தெரியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மிசோரம் மாநில தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் மிசோரத்தில் மட்டும்தான் இன்னும் காங்கிரஸ் ஆட்சி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரவிருக்கும் மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், "2019 பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு நன்றாகத் தெரியும்.

மிசோரம் மாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கூட்டு முயற்சி மேற்கொண்டுள்ளன. அதன் மூலமாகத்தான் கட்சியை வளர்க்க முடியும் என்று பாஜக தெரிந்து வைத்திருக்கிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

மிசோரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் மிசோரம் தேசிய முன்னணி பாஜகவின் கூட்டாளியைப் போல் செயல்படுவது வேதனை அளிக்கிறது. மாநிலத்தின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம், வரலாறு உள்ளிட்டவற்றை அழிக்க பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மிசோரம் தேசியமுன்னணி முயன்று வருகிறது" எனப் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close