[X] Close

கேஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல்


chilli-powder-thrown-at-arvind-kejriwal-aap-blames-police-lapses

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Nov, 2018 16:45 pm
  • அ+ அ-

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இன்று மதியம், கேஜ்ரிவால் உணவு இடைவேளைக்காக அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது யாரோ ஒருவர் அவரை அழைத்திருக்கிறார். அப்போது திரும்பிப் பார்த்த கேஜ்ரிவால் மீது சற்று எதிர்பாராத நேரத்தில் காகிதத்தல் மடித்துவைத்திருந்த மிளகாய்ப் பொடியை வீசியிருக்கிறார்.

இந்த மிளகாய்ப் பொடி அவரது கண்களில் படவில்லை என்றாலும்கூட தாக்குதலில் இருந்து அவர் தப்பிக்க முயன்றதில் அவருடைய மூக்குக்கண்ணாடி கீழ் விழுந்து நொறுங்கியுள்ளது.

இது குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், டெல்லி தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாகவும் பாஜகவின் வலியுறுத்தலின் பேரிலேயே காவல்துறை மெத்தனம் காட்டுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு மாநில முதல்வர் மீது இத்தகைய தாக்குதல் மிக மோசமானது எனவும் தெரிவித்துள்ளனர்.

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தகைய சம்பவம் ஏற்புடையதல்ல. இதை நியாயப்படுத்த முடியாது. இதை பொறுத்துக் கொள்ளவும் முடியாது. நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close