[X] Close

தமிழக மக்களுக்கு துணை நிற்போம்!- கேரள முதல்வர் ஆதரவு ட்வீட்


kerala-stands-alongside-with-the-people-of-tamil-nadu

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Nov, 2018 15:46 pm
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கஜா புயலின் கோர தாண்டவத்திலிருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும். குடி தண்ணீர், டார்பாலின், மெழுகுவர்த்திகள், உலர்ந்த உணவு பொருட்கள், புதிய ஆடைகள் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு கொடுக்கப்படும். கேரள அரசின் பேரிடர் மேலாண்மை வாரியம் இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும்"  எனப் பதிவிட்டுள்ளார்.

கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் மொத்தம் 1 லட்சத்து 70,454 மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் மற்றும் கனமழை காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றி கள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 3,559 கிமீ நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 3,404 குடிசை வீடுகள் பகுதி யாகவும் 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.  2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர் 493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது உதவிகளை அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கேரள முதல்வர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close