[X] Close

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை:  சுஷ்மா 


sushma-not-to-contest-in-elections

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Nov, 2018 15:26 pm
  • அ+ அ-

வரவிருக்கும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருக்கிறார். 

தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது , "பொதுவாக தேர்தலில் யாருக்கு சீட் வழங்குவது என்பதையெல்லாம் கட்சிதான் தீர்மானிக்கும் என்றாலும் எனது பக்கத்திலிருந்து நான் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருக்கிறேன்" என்றார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் 1998-ம் ஆண்டு அக்டோபர் 13 முதல் டிசம்பர் 3 வரை டெல்லி முதல்வராகவும் இருந்திருக்கிறார்.

மேலும் அவர், மத்திய அரசில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் சுஷ்மா மத்தியப் பிரதேசத்தின் விதிஷா தொகுதியில் நின்று போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மா வெளியுறவுத் துறை அமைச்சரானதிலிருந்து ட்விட்டர் வாயிலாக தன்னிடம் முன்வைக்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close