[X] Close

கட்டாயமாக ஓட்டுப் போட வேண்டும்: ம.பி திருமண நிகழ்ச்சியில் விழிப்புணர்வு போஸ்டர்


posters-urging-people-to-vote-put-up-at-wedding-function-in-mp

திருமண விழாவில் உறுதி மொழி எடுக்கும் விருந்தினர்கள் | படம்:ஏ.என்.ஐ

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 19 Nov, 2018 16:31 pm
  • அ+ அ-

ஒரு பக்கம் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வர, இன்னொரு பக்கம் மக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மாவட்ட நிர்வாகங்கள், அந்தந்த பகுதியின் தேர்தல் அதிகாரிகள் என அனைவரும், அவர்கள் பகுதி மக்கள் வாக்களிப்பதை உறுதிபடுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்களை ஆதரிக்கும் வண்ணம், பொதுமக்களும் தங்கள் இல்ல விழாக்களில் நவம்பர் 28 ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, இந்தி மற்றும் உருது மொழிகளில் போஸ்டர்கள் வைத்துள்ளனர். 

சமீபத்தில், புர்ஹான்புர் சிட்டி பகுதியில் நடந்த திருமணம் ஒன்றில், மணமகனின் தந்தை அதாஹுல்லா கான் என்பவர், வந்திருந்த விருந்தாளிகள் பார்க்க, இப்படியான ஒரு போஸ்டரை வைத்திருந்தார். சமூக சேவகரான கான், "ஓட்டுப் போடுவது தார்மீகப் பொறுப்பு என்பதால் நான் என் பங்குக்கு, எனது மகனின் திருமணத்தில் போஸ்டர் வைத்து அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இந்தப் பகுதியில் சிறுபான்மையினர் அதிகம் என்பதால், உருது மொழியிலும் போஸ்டர் வைத்துள்ளேன். படிக்க அனைவருக்கும் எளிதாக இருக்கும்" என்றார். 

மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

- ஏ.என்.ஐ

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close