[X] Close

சபரிமலையில் 2-வது நாளாக பக்தர்கள் தரிசனம்; பாஜக செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்


sabarimala

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 10:53 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2-வது நாளான நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் பகுதியில் அமைதி நிலவியபோதிலும், பாஜக பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் நாளான நேற்று முன்தினம் இருமுடி கட்டி வந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, இருமுடி கட்டி வந்த இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் கே.பி.சசிகலாவை நள்ளிரவில் அனுமதிக்க முடியாது எனக் கூறி போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர் திரும்பிச் செல்ல மறுத்ததால் அவரை கைது செய்தனர். இதைக் கண்டித்து அந்த அமைப்பினர் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் சசிகலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, நிலக்கல் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி வழியாக நேற்று முன்தினம் மாலை இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்ல முயன்ற மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பக்தர் என்ற முறையில் கோயிலுக்கு செல்ல விரும்புவதாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் சுரேந்திரன் கூறியதை போலீஸார் ஏற்கவில்லை. சுரேந்திரன் உள்ளிட்டோர் மீது தடை உத்தரவை மீறி அமைதியை சீர்குலைக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, பாஜக சார்பில் நேற்று ‘போராட்ட தினம்’ கடைபிடிக்கப்பட்டது. இதன்படி, தலைநகர் திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாஜகவினர் நேற்று நெடுஞ்சாலைகள் உட்பட முக்கிய சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர்.

14 நாள் காவல்

திருவல்லா மாஜிஸ்திரேட் நீதிம ன்றத்தில் சுரேந்திரன் உள்ளிட் டோரை போலீஸார் நேற்று ஆஜர் படுத்தினர். அவர்களை 14 நாட் களுக்கு நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட் டார். இதையடுத்து, கொட்டாரகாரா துணை சிறையில் சுரேந்திரன் அடைக்கப்பட்டுள்ளார். அந்த சிறை முன்பும் பாஜகவினர் ‘சுவாமியே ஐயப்பா’ என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 2-ம் நாளான நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதில் வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். மாநிலம் முழுவதும் பாஜக பொதுச் செயலாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றாலும், சன்னிதானம் பகுதியில் அமைதி யான சூழல் நிலவியது.

எனினும், இந்த முறை போலீ ஸார் அதிக அளவில் கெடுபிடி காட்டுவதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால், சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளதாக சன்னிதானத்துக் கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.ஜி. விஜய் சகாரே தெரிவித்தார்.

இளம்பெண் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மேரி ஸ்வீட்டி (46) என்ற பெண் நேற்று ரயில் மூலம் செங்கனூர் சென்றுள்ளார். அங்கிருந்து சபரிமலை செல்வதற்காக அரசு பஸ்ஸில் ஏறி உள்ளார். இதை யடுத்து பஸ்ஸை வழிமறித்த போராட்டக்காரர்கள், சுவாமியே ஐயப்பா என கோஷம் எழுப்பி உள்ளனர். இதையடுத்து அந்தப் பெண் திரும்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

காங்கிரஸின் மூவர் குழு

சபரிமலை ஐயப்பன் கோயில் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாநில அமைச்சர்கள் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், அடூர் பிரகாஷ் மற்றும் வி.எஸ்.சிவகுமார் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சபரிமலை பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் பத்தனம்திட்டா நகரில் செய்தியாளர் களிடம் கூறும்போது, “சபரிமலை சன்னிதானம் போர்க்களமாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

அடூர் பிரகாஷ் கூறும்போது, “ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் மாநில அரசு போலீஸ் படையை ஏவி, தீவிரவாதத்தை எதிர்ப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது” என்றார்.

இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னந் தானம், வெள்ள பாதிப்புக்குப் பிறகு பக்தர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்வ தற்காக இன்று சபரிமலைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close