[X] Close
 

ஹாட்லீக்ஸ் : இதையும் தாங்கும் இதயம் வேண்டும்!


hot-leaks-ops

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

  • kamadenu
  • Posted: 01 Aug, 2018 13:58 pm
  • அ+ அ-

தமிழக ஆட்சித் தலைமையை தனது விருப்பப்படி மாற்றி அமைக்க பாஜக ஒரு பிளான் போடுகிறது. 

அந்த மாற்றத்துக்கு அணைபோடவே ஓபிஎஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கச் சென்றாராம். 

இந்த விஷயம் தெரிந்து அவரைச் சந்திக்க வேண்டாம் என உள்துறை அமைச்சர் பாதுகாப்புத் துறை அமைச்சரை அறிவுறுத்தினாராம்.

 அதன்படியே ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்த நிர்மலா சீதாராமன், இவர்கள் வெளியில் போய் வேறு எதையாவது சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அதை ட்விட்டரிலும் பதிவு செய்தார். 

அத்தோடு,“இந்த முயற்சியை இப்படியே விட்டுவிட்டால் அனைவருக்கும் நல்லது. இது எனது கருத்தல்ல... சொல்லச் சொன்னதைச் சொல்லிவிட்டேன்” என்று தூதுவந்த மைத்ரேயனிடம் சொல்லி அனுப்பினாராம் நிர்மலா. 

இதைக் கேட்டுவிட்டு வந்துதான் “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்று கருத்துச் சொன்னாராம் ஓபிஎஸ்!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close