[X] Close

ஹாட்லீக்ஸ் : நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய...


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 01 Aug, 2018 09:14 am
  • அ+ அ-

தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரப்போவதாக ஊடகங்கள் வழியாகச் சிலர் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். 

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் ஏடாகூடமாக ஏதாவது தீர்ப்பு வந்தால், அதை வைத்து எம்.எல்.ஏ-க்கள் யாரும் ஊசலாடிவிடக் கூடாது என்பதற்காக ஆளும்கட்சி தரப்பிலிருந்து திட்டமிட்டு கிளப்பப்பட்ட வதந்தியாம் இது. 

அமைச்சரவை மாற்றம் வந்தால் தங்களுக்கும் ஏதாவது கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் எம்.எல்.ஏ-க்கள் அங்கும் இங்கும் நகராமல் இருப்பார்கள் என்பதுதான் இந்த வதந்தி கிளப்பியதன் உள்நோக்கமாம். 

இதனிடையே, சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அடுத்த கட்ட ‘கவனிப்பும்’ பலமாகவே கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் ஒரு தகவல்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close