[X] Close
 

ஹாட்லீக்ஸ் : குற்றாலம், கொடைக்கானல், டெல்லி... அமைச்சர்களின் அடேங்கப்பா டிரிப்ஸ்!


hot-leaks-ministers-tour

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

  • kamadenu
  • Posted: 31 Jul, 2018 11:59 am
  • அ+ அ-

கடந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் திக்கிக் திணறி வெற்றிபெற்றார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். அதனால், அடுத்த தேர்தலில் அவர் புதுக்கோட்டைக்கு மாறும் திட்டத்தில் இருக்கிறாராம். அதற்காக இப்போதே புதுக்கோட்டை தொகுதிவாசிகளைக் குளிப்பாட்ட ஆரம்பித்திருக்கிறார். அண்மையில் புதுக்கோட்டைவாசிகள் சுமார் 500 பேரைக் குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று அங்கே ஒருவாரம் உணவு உள்பட ‘அனைத்தும்’ கொடுத்து ஆனந்தக் குளியல் போடவைத்திருக்கிறார்.

இங்கே இப்படியென்றால் திருச்சியில் வேறு கதை. அங்கே அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான குமாருக்கும் ஏழாம் பொருத்தம். இந்த நிலையில் தனது விசுவாசிகள் 50 பேரை அண்மையில் டெல்லிக்கு அழைத்துச் சென்று ஊர்சுற்றிக் காட்டினார் குமார்.

இதற்குப் போட்டியாக தனது தொகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேரை ஐந்தாறு பஸ்களில் ஏற்றி கொடைக்கானலுக்கு குளு குளு டிரிப் அனுப்பி வைத்திருக்கிறார் வெல்லமண்டி!

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close