[X] Close
 

ஹாட்லீக்ஸ் : மனக்கசப்பும் மகிளா மோச்சா மாநாடும்!


hot-leaks-bjp

தமிழிசை செளந்தர்ராஜன் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

  • kamadenu
  • Posted: 31 Jul, 2018 09:41 am
  • அ+ அ-

தமிழக பாஜக மகிளா மோச்சாவின் தமிழ் மகள் மாநில மாநாடு கடந்த 22 -ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் நடந்தது. 

இந்த மாநாட்டு மேடையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைத் தவிர ஆண் நிர்வாகிகள் யாரும் மேடையில் ஏறக்கூடாது என்பது கட்சித் தலைமையின் உத்தரவாம். 

ஆனால், ஹெச்.ராஜாவையும் இல.கணேசனையும் மேடையில் ஏற்றி அவர்களுக்கும் பத்து நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று மகிளா மோச்சாவின் மாநிலத் தலைவி மகாலட்சுமி ரொம்பவே மெனக்கெட்டாராம். 

ஆனால், தலைமை அதற்குச் சம்மதிக்கவில்லையாம். இதையடுத்து, பொன்னார் மட்டுமே மேடை ஏற்றப்பட்டார்.

 கட்சியின் மாநில நிர்வாகிகள் அனைவரும் மேடைக்குக் கீழேயே அமரவைக்கப்பட்டனர். அதேசமயம், ஹெச்.ராஜாவும் இல.கணேசனும் ஏதோ மனக்கசப்பில் மாநாட்டுக்கு வராமலேயே ஒதுங்கிவிட்டனர்.

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close