[X] Close

ஹாட்லீக்ஸ் : அரசியல் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ராய்!


hot-leaks-aiswarya-rai

தேஜ் பிரதாப் - ஐஸ்வர்யா ராய்

  • kamadenu
  • Posted: 30 Jul, 2018 16:09 pm
  • அ+ அ-

பிஹாரில், லாலுவின் மகன்களான தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு இடையில் வாரிசுச் சண்டை உச்சத்தில் இருக்கிறது. 

இவர்களது மோதலைப் பெற்றோர் தலையிட்டுத் தற்காலிகமாக சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், இந்தக் குடும்பத்தில் இன்னொரு அரசியல் வாரிசாக தேஜ் பிரதாப் யாதவ், தனது மனைவி ஐஸ்வர்யா ராயைக் களமிறக்கத் திட்டமிடுகிறார். 

இதன் தொடக்கமாக தேஜ் பிரதாப்பின் ஆதரவாளர்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய்க்கும் பேனர்களை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

இதைப் பார்த்துவிட்டு கடைக்குட்டி சிங்கம் என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close