[X] Close
 

ஹாட்லீக்ஸ் : மூர்த்திக்கு முதலிடம்


hot-leaks-akmurthy

  • kamadenu
  • Posted: 27 Jul, 2018 15:57 pm
  • அ+ அ-

பாமக-வின் 30-ம் ஆண்டு தொடக்க விழாவை கட்சியின் சென்னை மாவட்ட அலுவலகத்தில் தட்டுத் தட்டாய் லட்டெல்லாம் கொடுத்து அமர்க்களமாய் கொண்டாடினார்கள். 

இந்தக் கொண்டாட்டங்களில் டாக்டர் ராமதாஸூம் அன்பு மணி ராமதாஸூம் புது உற்சாகத்துடன் தென்பட்டார்கள். 

வழக்கமாக ராமதாஸுக்குப் பக்கத்தில் கட்சித் தலைவர் ஜி.கே.மணிதான் கோலோச்சுவார். ஆனால், இம்முறை அந்த இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பிடித்துக் கொண்டார். 

ராமதாஸிடம் அவர் அடிக்கடி ஏதோ மெதுவாகச் சொல்ல... அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள கழுத்தைத் திருப்பித் திருப்பி ரொம்பத்தான் சிரமப்பட்டுப் போனார் மணி.

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close