[X] Close

ஹாட்லீக்ஸ் : எங்கே இருக்கிறார் லாரன்ஸ்..?


hot-leaks-larance

  • kamadenu
  • Posted: 27 Jul, 2018 15:21 pm
  • அ+ அ-


அதிமுக ஆட்சியில் 1993 - 1996 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தவர் கு.லாரன்ஸ். 

காமராஜர் அமைச்சரவையில் அங்கம் வகித்த லூர்தம்மாளுக்குப் பிறகு முப்பது ஆண்டுகள் கழித்து குமரி மாவட்டத்துக்குக் கிடைத்த அமைச்சரும் இவரே! 

அதிமுக-வில் மாவட்டச் செயலாளர், சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் பதவிகளில் இருந்த இவர், ஒரு கட்டத்தில் இறங்குமுகமாகி திமுக-வில் இணைந்தார். 

 வழக்கறிஞரான லாரன்ஸ், சிறந்த பேட்மின்டன் வீரர். தக்கலையில் பேட்மின்டன் கிளப் நடத்தி வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு இவரது கிளப்பில் இலவச பேட்மின்டன் பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு திமுக-வில் சேர்ந்த லாரன்ஸ், இப்போது அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைச் செயலாளராக உள்ளார். 

இதுவரை இவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை திமுக. இதுபற்றி கேட்டால், “அரசியல் என்பது சமூகப்பணி. அதை எங்கிருந்தாலும் செவ்வனே செய்யலாம்” என்கிறார் லாரன்ஸ்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close