[X] Close

ஹாட்லீக்ஸ் : வரவேண்டியது வந்துட்டு இருக்குல்ல..?


hotleaks-ops

  • kamadenu
  • Posted: 26 Jul, 2018 14:03 pm
  • அ+ அ-

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் கட்சித் தலைமையகத்தில் நடந்தது. 

இதில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், “கழக உறுப்பினர்களில் 75 லட்சம் பேர் இன்னமும் தங்களது உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கவில்லை. நான் விசாரித்தவரை, கீழ்மட்டத் தொண்டர்கள் பலரும் ரஜினி மன்றத்துக்குப் போய்விட்டதாகக் கேள்விப்படுகிறேன். 

எனது மாவட்டத்திலேயே இந்தத் தவறு நடந்திருக்கிறது. பிறகு விஷயம் தெரிந்து அவர்களை எல்லாம் மீண்டும் அழைத்து வந்து கட்சியில் சேரவைத்தேன். 

ஆளும் கட்சியாக இருக்கும்போதே இப்படியொரு நிலை வருவது நல்லதல்ல. அம்மா காலத்தைப் போலவே இப்போதும் உங்களுக்கெல்லாம் வரவேண்டியது வந்துகொண்டுதானே இருக்கிறது. பிறகேன் இப்படி?” என்று மாவட்டச் செயலாளர்களைப் பார்த்துக் கேட்டாராம் ஓ.பி.எஸ்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close