[X] Close

ஹாட்லீக்ஸ் : நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு?


hot-leaks-nainar-nagentran

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்

  • kamadenu
  • Posted: 24 Jul, 2018 12:12 pm
  • அ+ அ-

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜியின் திருமணம் சமீபத்தில் நெல்லையில் நடந்தது. 

காலையில் நடந்த திருமண நிகழ்வில், அதிமுக அமைச்சர்கள் ராஜலெட்சுமி, கடம்பூர் ராஜூ ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். 

மாலையில் வந்த வருவாய்த்துறை அமைச்சர்உதயகுமார், நயினார் நாகேந்திரனிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். 

இதையெல்லாம் சந்தேகக் கண்கொண்டு துளைக்க ஆரம்பித்திருக்கும் நெல்லை பாஜக-வினர், “தலைவரு மீண்டும் தாய்க்கழகம் திரும்பிருவாரு போலிருக்கே..!” என்று பிரேக்கிங் நியூஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close