[X] Close
 

ஹாட்லீக்ஸ் : நிருபர்களையும் கலாய்க்கும் அழகிரி!


hot-leaks-azhagiri-press

மு.க.அழகிரி

  • kamadenu
  • Posted: 23 Jul, 2018 09:46 am
  • அ+ அ-

தம்பி ஸ்டாலினைக் கலாய்க்க அடிக்கடி எதையாவது கொளுத்திப் போடும் அழகிரி, இப்போது நிருபர்களையும் செமையா கலாய்க்கிறாராம்.

 கடந்த வாரம், ஒரு முன்னணி பத்திரிகையின் நிருபர் ஒருவர் அழகிரியிடம் “ஸ்பெஷல் பேட்டி வேண்டும்” என்று போனில் கேட்டாராம். “கேள்விகளை வாட்ஸ் -அப் பண்ணுங்க பார்க்கலாம்” என்றாராம் அழகிரி. 

நிருபரோ, “அதெல்லாம் வேண்டாம்... உங்களை நேரில் சந்திக்க வேண்டும்” என்றாராம். அப்போதும் விடாத அழகிரி, “இதுக்கு முன்ன நீங்க என்னைய நேர்ல சந்திச்சிருக்கீங்களா?” என்று கேட்க, “இல்லையே...” என்று இழுத்தாராம் நிருபர். பதிலுக்கு, “அப்டீன்னா உங்கள எப்படி நான் நம்புறது?” என்றாராம் அழகிரி. 

உடனே அந்த நிருபர் தனது அடையாள அட்டையை வாட்ஸ் - அப்பில் விட்டாராம். அதைப் பார்த்துச் சிரித்தவர், தனக்கு அருகிலிருந்தவரிடம், “யோவ்... விட்டா பர்த் சர்டிஃபிகேட்டையும் அனுப்புவாங்க போலிருக்கே” என்று சொல்லிவிட்டு மீண்டும் நிருபரிடம், “நீங்க எத்தன வருசமா ரிப்போர்ட்டரா இருக்கீங்க..?” என்று பேட்டியைத் தொடர்ந்திருக்கிறார். 

“முப்பது வருசமா இருக்கேன்...” என்று நிருபர் சொல்ல... “ஒருநாள் நிருபர்கள்கூட என்னைய நேர்ல பார்த்திருக்காங்க... ஆனா, நீங்க முப்பது வருசம் நிருபரா இருந்துட்டு ஒரு தடவைகூட பாத்ததில்லைங்கிறீங்க. சரி, எனக்கு இப்ப பேட்டி குடுக்கிற மைண்டு இல்லை... டைம் வர்றப்ப நானே உங்களக் கூப்பிடுறேன்” என்று சொல்லி லைனைத் துண்டித்தாராம் அழகிரி.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close