[X] Close
 

ஹாட்லீக்ஸ் : அந்த 15 லட்சம் என்னாச்சு பாஸ்?


hot-leaks-15-lakhs

  • kamadenu
  • Posted: 21 Jul, 2018 16:30 pm
  • அ+ அ-

“சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு வந்து இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும்” என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி பிரச்சாரம் செய்தார். 

இப்போது அடுத்த தேர்தல் நெருங்குவதால், “அந்த 15 லட்சம் என்னாச்சு பாஸ்?” என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டன. 

இதைச் சமாளிக்கும் வகையில், “மோடி அப்படிப் பேசவே இல்லையே” என்று தனது கட்சிப் பிரமுகர்களை எதிர் பிரச்சாரம் செய்யச் சொல்லியிருக்கிறதாம் பாஜக தலைமை. 

இதையடுத்து ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள், தலைமையின் கருத்தை அப்படியே எதிரொலித்து வருகிறார்கள். 

இதற்குப் போட்டியாக சமூக ஊடகங்களில் மோடியின் 15 லட்ச ரூபாய் டெபாசிட் பேச்சும் வைரலாகி வருகிறது!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close