[X] Close

ஹாட்லீக்ஸ் : ஜகா வாங்கிய வேல்முருகன்


hot-leaks-velmurugan

வேல்முருகன்

  • kamadenu
  • Posted: 20 Jul, 2018 09:23 am
  • அ+ அ-


தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்குப் போராடுவதற்காக ‘தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவரானார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். 

இந்த அமைப்பில் பத்துக்கும் மேற்பட்ட முக்கியத் தமிழ் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்புதான் நெய்வேலி நிலக்கரிச் சுரங்க முற்றுகை, சென்னையில் ஐபிஎல் எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. 

இப்போது நிபந்தனை ஜாமீனில் நாகர்கோவிலில் தங்கியிருக்கிறார் வேல்முருகன். 

தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் 
வேல்முருகனைச் சந்தித்து கோரிக்கை வைத்தார்களாம். 

ஆனால், “நிலைமை சரியில்லை... அதனால் போராட்டம் நடத்துவதெல்லாம் இப்போதைக்கு சரிப்பட்டு வராது” என்று சொல்லி மறுத்துவிட்டாராம் வேல்முருகன்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close