[X] Close

ஹாட்லீக்ஸ்: ஜாகை மாறுகிறாரா செல்லூர் ராஜூ?


hot-leaks-sellur-raju

அமைச்சர் செல்லூர் ராஜூ

  • kamadenu
  • Posted: 19 Jul, 2018 11:43 am
  • அ+ அ-

தன்னை வளர்த்துவிட்ட சீனியரான எஸ்.டி.கே.ஜக்கையனை ஓரங்கட்டிவிட்டு அரசியலில் முன்னுக்கு வந்தவர் அமைச்சர் செல்லூர் ராஜூ.

 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுபோல், இப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார் ராஜூ. 

மதுரை மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ-க்கள் அத்தனை பேரையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார் உதயகுமார்.
முதல்வரிடமும் செல்வாக்காய் இருக்கிறார் உதயகுமார். 

அதனால்தான் இவர் கூப்பிட்டபோதெல்லாம் மதுரைக்கு ஓடோடி வருகிறார் முதல்வர். 

இதெல்லாமே ராஜூ வட்டாரத்தை சிடுசிடுக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 

இதைப் புரிந்துகொண்டு தினகரன் தரப்பிலிருந்தும் ராஜூவுக்கு மெல்ல நூல்விட்டுப் பார்க்கிறார்களாம். 

செல்லூராரும் மத்திய அரசுக்கு எதிராக பட்டும் படாமல் கருத்துகளை எடுத்துவிடத் தொடங்கியிருக்கிறார். இதெல்லாம் எதில்போய் முடியுமோ தெரியவில்லை!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close