[X] Close

ஹாட்லீக்ஸ் : ஏழ்ரையக் கூட்டுறதே வேலையா?


hot-leaks

படம்: எல்.சீனிவாசன்

  • kamadenu
  • Posted: 17 Jul, 2018 10:22 am
  • அ+ அ-

நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் ஒன்றிரண்டு பேரைத் தவிர... மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே வேட்டி - சட்டையில் பளிச்சென சபைக்கு வந்திருந்தனர். 

அதிமுக எம்.எல்.ஏ-வான ஆறுகுட்டியும் திமுக எம்.எல்.ஏ-வான சேகர்பாபுவும் சிரித்துப் பேசியபடியே சபைக்கு வந்துகொண்டிருந்தார்கள். இதைப்பார்த்துவிட்டு மீடியாக்காரர்கள் சிலர், இருவரையும் ‘க்ளிக்’கித் தள்ள... தெறித்து ஓடவேண்டிய ஆறுகுட்டி அமைதியாய் நடந்தார்.

 மாறாக, “எதையாச்சும் எடுத்துப்போட்டு ஏழ்ரையக் கூட்டுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு...” என்று சங்கடத்துடன் தலையைச் சொறிந்தார் சேகர்பாபு. 

இதன்பிறகு ஆறுகுட்டி மட்டும் சட்டமன்றத்துக்குள் செல்ல... சேகர்பாபு அவரை விட்டு தேங்கி நின்றுவிட்டு சற்று நேரம் கழித்தே சபைக்குள் அடிவைத்தார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close