[X] Close

ஹாட்லீக்ஸ் : மகனுக்காக மெனக்கெடும் சீனாதானா!


hot-leaks-chidambaram

ப.சிதம்பரம்

  • kamadenu
  • Posted: 16 Jul, 2018 10:39 am
  • அ+ அ-

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தைக் கைதுசெய்வதற்கான தடையை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறது நீதிமன்றம். 

தனக்கு எதிராகப் பின்னப்படும் அரசியல் வலையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சிதம்பரமோ, தனது சிவகங்கை தொகுதியைத் தேர்தலுக்குத் தயார்படுத்தும் வேலையில் மும்முரமாய் இருக்கிறார். 

டெல்லியில் இருந்தாலும் சென்னையில் இருந்தாலும் தினமும் தொகுதிப் பொறுப்பாளர்களுக்குப் போனைப் போட்டு பூத் கமிட்டி அமைப்புத் தகவல்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார் சிதம்பரம். 

இந்த முறையும் கார்த்தி சிதம்பரம்தான் சிவகங்கை வேட்பாளர் என்கிறார்கள் சிதம்பர விசுவாசிகள். ஆனால், ”வழக்கு இருப்பதால் கார்த்தியெல்லாம் இனி களத்துக்கு வர முடியாது” என்கிறது சுதர்சன நாச்சியப்பன் தரப்பு. 

இதையே காரணமாக வைத்து, நாச்சியப்பனும் இப்போது தொகுதிக்குள் வட்டமடித்து தனது ஆதரவாளர்களைத் தயார்படுத்தி வருகிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close