[X] Close

ஹாட்லீக்ஸ் : உடம்பைப் பாத்துக்கோங்க! - ஸ்டாலினுக்கு திவாகரன் அட்வைஸ்


hot-leaks-stalin-dhivakaran

ஸ்டாலின் - திவாகரன்

  • kamadenu
  • Posted: 11 Jul, 2018 14:24 pm
  • அ+ அ-

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சகோதரர் இல்லத் திருமணத்துக்காகக் கடந்த 2-ம் தேதி, மனைவி, மகன் சகிதம் தஞ்சை வந்திருந்தார் ஸ்டாலின். இந்தத் திருமணம் உதயநிதி தலைமையில் நடப்பதாகத்தான் ஏற்கெனவே ஏற்பாடு. ஆனால், திடீரென தலைமை மாறியது. தலைமைப் பொறுப்பை தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாக மேடையிலேயே அப்பாவைப் பார்த்து சிரித்தபடியே சொன்னார் உதயநிதி. “ஏற்கெனவே நான் இந்தத் தேதியில் வெளிநாடு செல்வதாகத் திட்டம். அதனால் உதயநிதி தலைமையேற்பதாக இருந்தது. வெளிநாட்டுப் பயணம் தள்ளிப் போனதால் நானே வந்துவிட்டேன்” என மகனுக்குத் தன்னிலை விளக்கம் தந்தார் ஸ்டாலின்.

இந்த விழாவில் நடந்த இன்னொரு எதிர்பாராத திருப்பம், ஸ்டாலின் - திவாகரன் சந்திப்பு! மேடைக்குக் கீழே முன் வரிசையில் அமர்ந்திருந்த திவாகரனை மேடைக்கு அழைக்கலாமா என முன்னாள் அமைச்சர் நேரு கேட்க,“வேண்டாம்” என்பது போல் தலையை ஆட்டினார் ஸ்டாலின். அதேசமயம், மேடையை விட்டு இறங்கியதுமே வலியப் போய் திவாகரனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார் ஸ்டாலின். பதிலுக்கு திவாகரன், “நாங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கோம். நீங்கதான் ராத்திரிப் பகல்னு இல்லாம ஓடிக்கிட்டே இருக்கீங்க. உடம்பையும் கொஞ்சம் பாத்துக்கோங்க. உங்க உழைப்புக்கு சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்” என்று ஸ்டாலினுக்கு அருளாசி வழங்கினார். ஸ்டாலின் போனபிறகு, அங்கே மற்றவர்களிடம் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த திவாகரன், “ஆயிரம்தான் இருந்தாலும் அவரு நம்ம ஊருப் புள்ள. தினகரன் மாதிரி நேத்து பெஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் இல்லை. பல வருசமா கட்சிக்காக உழைக்கிறாரே..!’’ என்று சொன்னாராம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close