[X] Close
 

ஹாட்லீக்ஸ் : கோவையைப் பிரிக்காதீங்கய்யா...


hot-leaks-kovai

  • kamadenu
  • Posted: 11 Jul, 2018 09:59 am
  • அ+ அ-

கோவை திமுக-வில், வடக்கு, தெற்கு என இரண்டாக இருந்த மாநகர் மாவட்டங்கள் மீண்டும் கோவை மாநகர் மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 57 வார்டுகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. எஞ்சியவை புறநகர் மாவட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இதனால், தலைமை அறிவிக்கும் போராட்டங்களுக்கு கோவை மாநகரில் இருப்பவர்கள் புறநகர்களுக்கு ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கோஷ்டி கானம் காதைக் கிழிக்கும் கோவை திமுக-வை இது மேலும் பலவீனமாக்கும் என்று சொல்லும் கட்சி நிர்வாகிகள், “கோவை மாநகரின் 100 வார்டுகளையும் ஒரே மாவட்டமாக அறிவிக்க வேண்டும்’’ எனக் குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close