[X] Close
 

ஹாட்லீக்ஸ் : கணக்குப் போடும் கமல்ஹாசன்


hotleaks-kamal

  • kamadenu
  • Posted: 10 Jul, 2018 10:00 am
  • அ+ அ-

கர்நாடகா முதல்வருடன் சந்திப்பு, தேர்தல் கமிஷனில் கட்சிப் பெயர் பதிவு, ராகுல், சோனியா காந்தி சந்திப்பு, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் பேச்சு எனத் தனது கட்சியை விசாலப்படுத்திக்கொண்டே இருக்கிறார் கமல்ஹாசன். 

தனது கட்சியை மாநில கட்சியாக இல்லாமல் தேசியக் கட்சி அந்தஸ்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படிக் கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிறாராம் கமல்.

 இதனால்தான், கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் கமிஷனில் கேட்டபோதுகூட, “அப்புறம் அப்டேட் செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். 

தேசிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே கமல் இந்த அவகாசத்தைக் கேட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close