[X] Close

ஹாட்லீக்ஸ் : ‘மாமூல்’ வாழ்க்கையும்... மணல் கடத்தல் கைதும்!


hot-leaks-manal

  • kamadenu
  • Posted: 08 Jul, 2018 12:24 pm
  • அ+ அ-

நாகை மாவட்டம் வாய்மேடு காவல்நிலையத்தின் தலைமைக் காவலர் செல்வராஜ். கடந்தவாரம், இவரை மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் காவல் ஆய்வாளர் வேலுதேவி கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தார். இதற்காக ஆய்வாளரைப் பலரும் பாராட்டிக்கொண்டிருக்க... உள்ளுக்குள் இன்னொரு கதையைச் சொல்கிறார்கள். 

காவல் துறையின் ‘மாமூலான’ வேலைகளில் செல்வராஜும் வேலுதேவியும் அடிக்கடி மோதிக்கொண்டார்களாம். இந்த நிலையில், ஆய்வாளரின் அந்தரங்க விஷயங்களை விமர்சித்து துண்டறிக்கைகளை சிலர் ஒட்டினார்கள். 

இதன் பின்னணியில் செல்வராஜ் இருப்பதாக வேலுதேவியிடம் சிலர்போட்டுக் கொடுத்தார்கள். இதையடுத்து, செல்வராஜ் மீது கெட்ட கடுப்பில் இருந்த வேலுதேவி, டிராக்டர் வைத்து மணல் கடத்திய செல்வராஜைக் கைது செய்து இரவோடு இரவாக வழக்குப் போட்டு ஜெயிலுக்கும் அனுப்பியிருக்கிறார்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close