[X] Close

எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆகிட்டோம்...


hot-leaks-natarajan

  • kamadenu
  • Posted: 07 Jul, 2018 16:31 pm
  • அ+ அ-

மறைந்த ம.நடராஜனின் அண்ணன் சாமிநாதன். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, சாமிநாதனின் நெருங்கிய உறவுக்காரப் பெண்மணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் செயினை, வழிப்பறித் திருடர்கள் அறுத்துக் கொண்டு ஓடிவிட்டார்களாம்.

 நடராஜனின் சொந்த ஊரான விளாரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. 

இதுதொடர்பாக சாமிநாதன் தரப்பிலிருந்து தஞ்சை தாலுக்கா போலீஸில் புகார் கொடுத்தார்களாம். ஆனால், இதுவரை என்ன ஏது என்றுகூட போலீஸ் விசாரிக்கவில்லையாம். ”இந்த ஆட்சியை உருவாக்கியதே நாங்கள். எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆகிட்டோம்” என்று புலம்பிக்கொண்டிருக்கின்றன நடராஜனின் சொந்த பந்தங்கள். ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்று சும்மாவா சொன்னார்கள்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close