[X] Close

ஹாட் லீக்ஸ் : மச்சினிச்சி பெயரில் சினிமா விநியோகம்!


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 06 Jul, 2018 15:08 pm
  • அ+ அ-

அடுத்து அதிகாரத்துக்கு வருவோமா மாட்டோமா என்ற அச்சம் அதிமுக அமைச்சர் பெருமக்கள் பலரையும் இப்போது ஆட்டிப்படைக்கிறது. இதனால், சேர்த்த பணத்தை சிக்கனமா பல வழிகளில் முதலீடு செய்துகொண்டிருக்கிறார்கள்.

பகுத்தறிவு கட்சித் தலைவரின் பெயர் கொண்ட ஒரு அமைச்சர் இரண்டு பெட்ரோல் பங்க், ஒன்றுக்கு மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் என்று உஷார்படுத்தியிருக்கிறார்.

இன்னொரு அமைச்சர் தனது மனைவி மச்சினிச்சி பெயர்களில் சினிமா விநியோக உரிமைகளை வாங்கி கல்லாக் கட்டுகிறார்.

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கே டேக்கா கொடுத்த அமைச்சரோ, பெரிய துணிக்கடைகளுக்கு ஒரு ரூபாய் வட்டிக்கு கோடிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close