[X] Close

ஹாட்லீக்ஸ் : சகுனமே சரியில்லையேப்பா..!


hotleaks-ops-sagunam

துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.

  • kamadenu
  • Posted: 03 Jul, 2018 09:27 am
  • அ+ அ-

“இப்போதைக்கு கிரக நிலை சரியில்லையாக்கும்” என ஆஸ்தான ஜோதிடர் சொல்லியிருப்பதால், ஆன்ம பலம் வேண்டி கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். அதன் ஒரு பகுதியாக, பெரியகுளத்தில் 25 ஆண்டுகளாகத் தடைபட்டுக் கிடந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தினார் ஓபிஎஸ். கும்பாபிஷேக நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்குத் தங்க நகைகள் பறிபோயின. இதில் பெரும்பாலானவர்கள் தாலிக்கொடியைப் பறிகொடுத்தவர்கள். இதைக் கேள்விப்பட்டு, “சகுனமே சரியில்லையேப்பா...” என்று சத்தமின்றி புலம்பியதாம் ஓபிஎஸ் வட்டாரம். உண்மை இப்படியிருக்க, நகைகள் திருடு போனதாக நான்கு பேரிடம் மட்டுமே புகார்களை வாங்கி எஃப்ஐஆர் போட்டிருக்கிறது போலீஸ்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close