[X] Close

ஹாட்லீக்ஸ் : ‘காலா’வில் ரஜினி கத்தரித்த காட்சிகள்


hotleaks-rajini-cutscens

  • kamadenu
  • Posted: 02 Jul, 2018 09:31 am
  • அ+ அ-

‘காலா’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் ரஜினி வட்டாரம் கலங்கிப்போய்க் கிடக்கிறது. படம் பற்றி சினிமா உலகத்துப் பிரபலங்கள் சிலரிடம் அக்கறையுடன் விசாரித்தாராம் ரஜினி. ”இது சூப்பர் ஸ்டாருக்கான படமில்லை” என்று அத்தனை பேரும் ஒரே மாதிரியாய் சொன்னார்களாம். அதற்கு, “அவசரப்பட்டுட்டேனோ...” என்று ரஜினியும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம். அடுத்து உருவாகும் சன் பிக்சர்ஸ் படத்திலும் ரஜினி பேராசிரியர் பாத்திரத்தில் நடிக்கிறாராம். இதுவும் உங்களுக்குச் சரிப்பட்டு வராது என்று இப்போதே சிலர் எச்சரிக்கை மணி அடிக்கிறார்களாம்.

இன்னொரு கொசுறுத் தகவல். ‘காலா’வில் ரஜினி போலீஸை வெளுத்து வாங்கும் காட்சிகளும் இருந்தனவாம். தூத்துக்குடியில் போலீஸை ஆதரித்துப் பேசிவிட்டு வந்த பிறகு அந்தக் காட்சிகளை எல்லாம் கத்தரிக்கச் சொல்லிவிட்டாராம் ரஜினி! “ ‘காலா’ எப்படிப் போகுதாம்?” என்று கமலும் சிலரிடம் விசாரித்தாராம். “எங்க போகுது..?” என்று எக்குத்தப்பாய் பதில் வந்ததாம். “பேசாம இருங்க... நம்ம, ‘தேவர் மகன் - 2’ எடுப்போம்’’ என்று சொல்லி நமட்டுச் சிரிப்புச் சிரித்தாராம் கமல்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close