[X] Close

ஹாட்லீக்ஸ் : தஞ்சையில் ஊழல்... டெல்லியில் புகார்!


hotleaks-tanjore

  • kamadenu
  • Posted: 30 Jun, 2018 12:12 pm
  • அ+ அ-

தஞ்சை மாநகராட்சியில் ஆணையராக இருந்த மூன்று பேர் இதுவரை ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் தஞ்சை (நகராட்சி மற்றும்) மாநகராட்சியில் நடந்திருக்கும் ஊழல்கள் குறித்து ஊழல் பட்டியல் ஒன்றைத் தயாரித்திருக்கிறார் தேசியவாத காங்கிரஸின் மாநிலப் பொதுச் செயலாளர் கரிகால் சோழன்.

100 பக்கங்கள் கொண்ட இந்தப்புகாரை டெல்லிக்கே சென்று சிபிஐ அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

“நான் இப்படியொரு முயற்சி எடுப்பது தெரிந்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர், முறைகேடுகளை மறைப்பதற்காக போலி ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். சிபிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்துக்குப் போவேன்” என்று கர்ஜிக்கிறார் கரிகால் சோழன்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close