[X] Close

ஹாட்லீக்ஸ் : அம்மணிக்கு அடிமடியில் தீ!


hot-leaks-admk-ammani

  • kamadenu
  • Posted: 29 Jun, 2018 09:59 am
  • அ+ அ-

ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் அந்தப் பெண்மணி. சின்னம்மா தயவில் பெரிய இடத்துக்கு வந்த அந்த அம்மணி, ஆட்சி மாறியதும் வழக்கு, வாய்தா என்று அலைந்தார். அதிலிருந்து தப்பிக்க ஜாகை மாறிய அவர், இப்போது இன்னொரு முக்கியக் கழகத்தில் இருக்கிறார்.

ஆனால், கழகத்தில் கவிபாடும் அந்தஸ்தில் இருந்தாலும், அவரை ஓரங்கட்டியே வைத்திருக்கிறதாம் இப்போதுள்ள தலைமை. இதைவிட பரிதாபம் என்னவென்றால், அமைச்சராய் இருந்தபோது அப்படியும் இப்படியுமாய் சேர்த்த பணத்தில் பெரும்பகுதியை பிரபல சாராய சக்கரவர்த்தி ஒருவரிடம் லேவா தேவிக்குக் கொடுத்தாராம் இந்த அம்மணி.

இவருடைய பெரும் பணத்தை வைத்திருந்த அந்தச் சாராய அதிபர், திடீரென மரணமடைய... அடிமடியில் தீ பிடித்தது போல் ஆனார் அம்மணி! துக்கம் கழிந்ததும் சாராய அதிபரின் மகனிடம் போய் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

மகனோ, “வெளியாளுங்கட்ட பணம் வாங்கியிருந்தா அப்பா என்கிட்ட சொல்லியிருப்பாரே..!” என்று ஷாக் கொடுத்தாராம். இந்தத் துக்கத்திலிருந்து இன்னமும் மீளமுடியாமல் கிடக்கிறாராம் அம்மணி!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close