[X] Close
 

ஹாட்லீக்ஸ் : செயலருக்கு யோகா ‘டிப்ஸ்’ கொடுத்த அமைச்சர்!


hot-leaks-yoga-tips-minster

படம் : எல்.சீனிவாசன்

  • kamadenu
  • Posted: 28 Jun, 2018 10:12 am
  • அ+ அ-

சர்வதேச யோகா தினத்தில் சென்னை அரசுப் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் துறை செயலர் ராதாகிருஷ்ணனும் மாணவர்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சற்றுத் தாமதமாகவே வரும் விஜயபாஸ்கர் இம்முறை முன்னதாகவே ஆஜரானார். தாமதமாக வந்துசேர்ந்த ராதாகிருஷ்ணனிடம், “என்ன சார்... வீட்ல யோகாவெல்லாம் பண்றதில்லையா?” என்று விஜயபாஸ்கர் கேட்க, “அப்பப்ப பண்ணிக்குவேன்...” என்று சொன்ன ராதாகிருஷ்ணன், “நீங்க ரெகுலரா பண்ணுவீங்களோ..?” என்றார்.

அதற்கு, “நிச்சயமா சார்... யோகா பண்ணலைனா நம்மால அங்கிட்டு இங்கிட்டு திரும்ப முடியாது..!” என்று சொல்லிச் சிரித்தார் அமைச்சர். யோகா விரிப்பில் உட்கார்ந்த பிறகும் செயலருக்கு யோகா குறித்து ‘டிப்ஸ்’ கொடுத்துக்கொண்டே இருந்தார் அமைச்சர்!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close