[X] Close
 

ஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்


hot-leaks-peter

  • kamadenu
  • Posted: 22 Jun, 2018 14:55 pm
  • அ+ அ-

வடசென்னையில் கலைஞர் பிறந்த நாளுக்காகக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார்கள். இதில் பேசிய கட்சியின் புதிய வரவான பழ.கருப்பையா, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களைக் கொடுத்து வீணடித்துவிட்டது திமுக. அதனால்தான் தளபதி முதல்வராக முடியாமல் போய் விட்டது” என்று கொளுத்திப் போட்டார்.

இதற்கு அதே மேடையில் பதில் சொன்ன பீட்டர் அல்போன்ஸ், “2006 சட்டமன்றத் தேர்தலில் 90 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த திமுக-வுக்கு ஐந்து ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு தந்து ஆட்சியைக் காப்பாற்றியது காங்கிரஸ் கட்சிதான். இந்த நிமிடம் வரை காங்கிரஸ் கட்சி, திமுக-வுடன் தோழமையுடன் இருக்கவே விரும்புகிறது. முதலில் உங்களது எதிரி யார் என்று கண்டுகொள்ளுங்கள். தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை வம்புக்கு இழுக்க வேண்டாம்” என்று பஞ்ச் கொடுத்தார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close