[X] Close

ஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்!


hot-leaks-minister-manal

  • kamadenu
  • Posted: 22 Jun, 2018 12:50 pm
  • அ+ அ-

ஆளுங்கட்சியின் டெல்டா முக்கியஸ்தர் ஒருவர், தனது சொந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொண்டிருக்கிறார். இதன் கட்டுமானப்பணிக்காக மயிலாடுதுறை அருகிலுள்ள கடக்கம் என்ற ஊரிலிருந்து கொள்ளிடம் ஆற்று மணலை எந்தவித அனுமதியும் இல்லாமல், ராப்பகலாகக் கடத்துகிறார்களாம். இப்படிக் கடத்தும் மணலைப் பள்ளியின் கட்டுமானப்பணிகள் நடக்கும் இடத்தில் மலைபோல் குவித்து வைத்திருக்கிறார்களாம்.

இதுகுறித்து பொதுமக்களில் பலரும் மாவட்ட ஆட்சியருக்கு போனில் தகவல் கொடுத்திருக்கிறார்கள். “ஓ... யெஸ்... அப்படியா!” என அக்கறையுடன் கேட்டுக்கொண்ட ஆட்சியர், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறாராம்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close