[X] Close

இவரு நமக்கு செட்டாக மாட்டாரு!


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 16 Jun, 2018 13:44 pm
  • அ+ அ-

பால முருகனின் பெயர் கொண்ட மூத்த காங்கிரஸ்காரர் அவர். மூப்பனார் விசுவாசியான இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தன்மானக் கட்சியைவிட்டு போயஸ் கட்சியில் புகலிடம் தேடினார். போன வேகத்தில் அவருக்கு ராஜ்ய சபா சீட்டும் கொடுத்து அசத்திய புதுக்கட்சி, இவரைத் தொடர்ந்து இன்னும் பலர் அந்த முகாமிலிருந்து வருவார்கள் என்று எதிர்பார்த்ததாம். ஆனால், அப்படி ஒரு பிள்ளையும் வரவில்லையாம். அதுவுமில்லாமல், வந்து சேர்ந்த தலையும் கட்சியில் ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் ஒதுங்கிக்கொண்டாராம். இப்போது கட்சி நிகழ்ச்சிகளில்கூட தலைகாட்டத் தயங்கும் அவர் எப்போது கேட்டாலும், ”டெல் லியில் இருக்கிறேன்” என்ற பதிலையே தேய்ந்த ரெக்கார்டாகச் சொல்கிறாராம். இதனால் அலுத்துப்போன கட்சியினரும், “இவரெல்லாம் நமக்குச் செட்டாக மாட்டாருப்பா...” என்று சொல்லி சைலன்ட் ஆகிவிட்டார்களாம்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close