[X] Close

வருசம் 13 ஆச்சு... இன்னும் வரலையே...


hotleaks-kbm-school

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்கள்

  • kamadenu
  • Posted: 15 Jun, 2018 15:40 pm
  • அ+ அ-

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் தீ விபத்து நடந்து 13 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பல்வேறு அமைப்புகள் நேசக்கரம் நீட்டின. பலபேர் தனிப்பட்ட முறையிலும் நிதியுதவிகளை அளித்தனர். அந்தச் சமயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும் ஒரு கோடி ரூபாய் நிதியளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை அந்த நிதி போய்ச்சேரவில்லையாம். ‘தருவதாகச் சொன்ன நிதி என்னானது?’ என்று கேட்டு விரைவில் நீதிமன்றக் கதவுகளைத் தட்ட இருக்கிறார்களாம் பாதிக்கப்பட்ட மக்கள்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close