[X] Close

சூரியனைக் கும்பிட்ட செல்லூர் ராஜு!


suriyanai-kumbitta-sellur-raju-hot-leaks

அமைச்சர் செல்லூர் ராஜு

  • kamadenu
  • Posted: 14 Jun, 2018 14:00 pm
  • அ+ அ-

சட்டசபை புறக்கணிப்பைக் கைவிட்டு கடந்த 4-ம் தேதி மீண்டும் திமுக எம்.எல்.ஏ-க்கள் சபைக்கு வந்தனர். அப்போது முன்னதாக வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் பேரவைக்கு வெளியே மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது காரில் அங்கு வந்து இறங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக ம்.எல்.ஏக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே வானத்துச் சூரியனை பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.

இதைக் கவனித்துவிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள், “என்ன அண்ணே... சூரியனையெல்லாம் கையெடுத்துக் கும்புடுறீங்க...” என்று ஜாலியாய் கலாய்க்க, “யப்பா சாமி ஆளை விடுங்கய்யா...” என்ற படியே அவர்களுக்கும் பெரிதாக ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு நடையைக் கட்டினார் செல்லூரார்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close