[X] Close

ஹாட் லீக்ஸ்: திமுக-விலும் ஸ்லீப்பர் செல்!


hot-leaks-about-dmk-sleeper-cell

  • kamadenu
  • Posted: 13 Jun, 2018 09:07 am
  • அ+ அ-

திமுக-வில் நடக்கும் உள் விவகாரங்கள் எல்லாம் முதல்வர் ஈபிஎஸ்-ஸுக்கு உடனுக்குடன் பாஸ் ஆகிறதாம். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடருக்கான அலுவல் ஆய்வுக்குழு கூடிய அன்றே, “ஸ்டாலின், சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து மாதிரி சட்டமன்றத்தை நடத்தப் போகிறார்” என்று ஓபிஎஸ்ஸிடம் சொன்னாராம் ஈபிஎஸ். அதேபோல் அதற்கு அடுத்த சில தினங்களில், “மாதிரி சட்டமன்றம் பிசுபிசுத்துவிட்டது. திமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்கு வரப் போகிறார்கள்” என்றும் சொன்னாராம் ஈபிஎஸ். “இதெல்லாம் உளவுத்துறை தந்த தகவலா?” என்று ஓபிஎஸ் தரப்பு கேட்டதற்கு, “அதெல்லாம் இல்லை... திமுக-வில் இருக்கும் நமக்கு நம்பகமான ஸ்லீப்பர் செல்கள் தந்த தகவல்” என்று சொல்லிச் சிரித்தார்களாம் ஈபிஎஸ் அன்பர்கள்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close