[X] Close

மானத்தை வாங்குதே மகளிரணி!


hot-leaks-about-admk

  • kamadenu
  • Posted: 06 Jun, 2018 12:15 pm
  • அ+ அ-

சீர்காழி நகரத்தின் ஆளும்கட்சி முக்கியப் புள்ளி அவர். அண்மையில், சொந்தக் கட்சியின் மகளிரணி பிரமுகர் ஒருவரிடம் ‘மப்’பில் மனம்போன போக்கில் மாட்லாடிவிட்டாராம்.

இதைக்கேட்டு கொந்தளித்த மகளிரணி, அவர் பேசியதை எல்லாம் அப்படியே பதிவுசெய்து தொகுதியின் மக்கள் பிரதிநிதியிடம் ரீ-ப்ளே போட்டு நியாயம் கேட்டாராம். அவரும், “தனியா இருக்கிறவங்கட்ட இப்படியெல்லாமா பேசுறது?” என்று நகரப் புள்ளியை போனில் கண்டிக்க, பதிலுக்கு அவரோ, “ஏன், நீங்க மட்டும்தான் அவங்கட்ட அப்படிப் பேசணுமா... நாங்களெல்லாம் பேசக்கூடாதா?” என்று டபாய்த்தாராம்.

இப்போது, தான் பதிவு செய்திருந்த அந்த ஆடியோவை வாட்ஸ் - அப்பில் வலம் விட்டு மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார் மகளிரணி!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close