[X] Close

போராட்டம்... போலீஸ் வண்டின்னு அலுத்துப் போச்சுப்பா..!


duraimurugan-hot-leaks

  • kamadenu
  • Posted: 05 Jun, 2018 11:27 am
  • அ+ அ-

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காகக் கழகத்தினருடன் சென்றார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைத் தடுத்து கைதுசெய்தது காவல் துறை. அதுவரை முற்றுகை லைனில் முன் வரிசையில் நின்ற முன்னாள் அமைச்சர் துரைமுருகன், கைது நடவடிக்கை தொடங்கியதும் தனது காரில் போய் உட்கார்ந்துவிட்டார். கார் கண்ணாடியை ஏற்றி விட்டபடி வாட்ஸ் - அப் வறுவல் பார்த்துக்கொண்டிருந்த அவரை மீடியா கேமராக்கள் வளைக்க... “என்ன ராஜா... போட்டோ எடுக்கணுமா? நல்லா எடுத்துக்க...” என்று கார் கண்ணாடியை இறக்கிவிட்டு போஸ் கொடுத்தார். கூடவே, “போராட்டம்... போலீஸ் வண்டின்னு அலுத்துப் போச்சுப்பா... நம்மாள முடியல... அதான் காருல வந்து உட்காந்துட்டேன்” என்று தன்னிலை விளக்கமும் தந்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close