[X] Close

ஹாட் லீக்ஸ்: குஸ்தி கட்டும் குமாரு..!


hot-leaks-about-kumar-mp

  • kamadenu
  • Posted: 30 May, 2018 09:59 am
  • அ+ அ-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.அண்மையில், அந்தப் பதவியை குமார் எம்.பியிடம்தந்துவிட்டு அவைத் தலைவரானார். தனது உடல்நிலையைக் காரணம்காட்டி நடராஜன் குமாருக்கு வழிவிட்டதாகவும், “நீங்க சொல்றபடியே நடந்துக்கிறேன்” என்று குமார் சொன்னதாகவும் அப்போது பேச்சு. ஆனால், இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டதாம். நடராஜன் எது சொன்னாலும் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ ஸ்டைலில் கிடப்பில் வைக்கும் குமார், ஏற்கெனவே, சத்துணவு உள்ளிட்ட பணிகளுக்காக நடராஜன் செய்திருந்த சில சிபாரிசுகளையும் கேன்சல் செய்துவிட்டு அந்த இடங்களுக்கு தனக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க அழுத்தம் கொடுக்கிறாராம். இதையெல்லாம் முதல்வரிடம் சொல்லி முகம் சிவந்திருக்கிறாராம் அமைச்சர்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close