[X] Close
 

ஹாட் லீக்ஸ்: முக கறுப்புப் பட்டியல் தயார்


stalin-black-list

  • kamadenu
  • Posted: 29 May, 2018 07:38 am
  • அ+ அ-

கட்சிப் பொறுப்பாளர்கள் மீதான புகார்களைத் தெரிவிக்க அண்மையில் அறிவாலயத்தில் புகார் பெட்டி ஒன்றை வைத்தார் ஸ்டாலின். வைத்த வேகத்தில் அதில், புகார்கள் வந்து குவிந்தன. அந்தப் புகார்களின் உண்மைத் தன்மையை விசாரிப்பதற்காக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தலைமையில் வழக்கறிஞர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இருப்பவர்கள் மாவட்டத்துக்கு இருவர் வீதம் அனுப்பப்பட்டு கட்சிப் பொறுப்பாளர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 50 ஒன்றிய - நகரச் செயலாளர்கள் கறுப்புப் பட்டியலில் இருக்கிறார்களாம். இவர்களுக்குப் பதிலாக யாரை அந்தப் பதவிகளில் நியமிக்கலாம் என்பது குறித்தும் வழக்கறிஞர்கள் குழுவிடமே பரிந்துரைப் பட்டியல் கேட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.

[X] Close