[X] Close
 

ஹாட் லீக்ஸ்: லட்டில் ‘பிட்’டெடுத்த தமிழிசை!


tamilisai-laddu

  • kamadenu
  • Posted: 26 May, 2018 09:12 am
  • அ+ அ-

கர்நாடகா தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிய நேரம்... காலை பதினோரு மணி வாக்கில், பாஜக தலைமையகமான கமலாலயம் வந்தார் தமிழிசை சவுந்தர்ராஜன். அப்போது பெருவாரியான இடங்களில், பாஜக முன்னிலை என செய்திகள் ஓடிக்கொண்டிருந்ததால் மகளிரணி மக்கள் லட்டு டப்பாக்களைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்கள். அதில் ஒரு மேடம், முழு லட்டை எடுத்துத் தமிழிசைக்கு ஊட்டப் போனார். அவரது ஆர்வத்தைப் பார்த்து மிரண்ட தமிழிசை, நாசூக்காய் லட்டைத் தவிர்த்தார். அதற்கு இன்னொரு அம்மணி, “மேடம் உங்களுக்கு சுகர் இருக்கோ... லட்டைப் பார்த்துப் பயப்படுறீங்க?” என்று கேட்க, “அதெல்லாம் இல்ல...” என்றபடியே அந்த லட்டில் ஒரு ‘பிட்’டை மட்டும் எடுத்து வாயில் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த தமிழிசை, “கர்நாடகா வையும் சேர்த்து மொத்தம் 22 மாநிலங்களைப் பிடிச்சாச்சு. அதே மாதிரி தமிழகத்தையும் பிடிப்போம்” என்று பிரேக்கிங் நியூஸும் வாசித்தார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close