[X] Close
 

ஹாட் லீக்ஸ்: காணாமல் போன ‘கானா’


kana-karuppasami-pandiyan

  • kamadenu
  • Posted: 24 May, 2018 10:31 am
  • அ+ அ-

‘கானா’ என கழகத்தினரால் செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் நெல்லை கருப்பசாமி பாண்டியன். அதிதீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான கானா, 25 வயதிலேயே எம்.எல்.ஏ. ஆனவர். எம்.ஜி.ஆருக்குப் பிறகும் கட்சியில் செல்வாக்கான நபராகத் திகழ்ந்த கானா, ஜெயலலிதா தலைமையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உயர்ந்தார். பிறகு, கட்சியில் ஏற்பட்ட மனக் கசப்பில் திமுக-வில் இணைந்தார். அங்கேயும் மரியாதைக்குக் குறைவில்லை. இவரின் மதிப்பறிந்து மாவட்டச் செயலாளராக்கினார் கருணாநிதி. ஆனால், அதிகாரம் ஸ்டாலின் கைக்கு மாறியதும் கானா கலர் குறையத் தொடங்கினார். போதாதுக்கு, தனக்கு எதிராகக் கிளப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளானார். இதனால், விரக்தியின் விளிம்புக்கு வந்தவர், மீண்டும் அதிமுக-வில் ஐக்கியமானார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவால் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆக்கப்பட்டார். ஆனால், தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதும், அதை எதிர்த்துத் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு அரசியல் மேடையை விட்டு ஒதுங்கியே இருக்கிறார் கானா. மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த தனக்கு, ஒருமுறைகூட சுழல் விளக்கு வைத்த காரில் செல்லும் யோகம் அமையவில்லையே என்பது கானாவின் அடிமனத்தை இன்னமும் அழுத்திக் கொண்டிருக்கும் ஆதங்கம்!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close