[X] Close

ஹாட் லீக்ஸ்: அவருக்கு இங்கு இடமில்லை!


hot-leaks-about-azhagiri

  • kamadenu
  • Posted: 19 May, 2018 08:56 am
  • அ+ அ-

அஞ்சா நெஞ்சரை மீண்டும் கழகத்தில் சேர்க்க குடும்பத்துப் பெண்மணிகள் பேச்சு நடத்தினார்களாம். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த செயல் புள்ளி, “வேலியில போறதை எடுத்து மறுபடியும் வேட்டிக்குள்ள விடுற வேலையா பாக்காதீங்க” என்று சொன்னதுடன், “அவர் வேண்டாம்... வேண்டுமானால் அவரது ஆதரவாளர்களை வரச் சொல்லுங்கள். செய்யவேண்டியதைச் செய்வோம். உங்களுக்கும் தேர்தல் ஆசை இருந்தால் சொல்லுங்கள் அதையும் பரிசீலிப்போம். ஆனால், இன்னொரு தரம் அவரைப்பற்றி மட்டும் பேசாதீர்கள்” என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்!

மாட்டிக்கொண்ட மாணிக்கம் மாசற்ற மாணிக்கம் எனக் கழகத்தினர் வர்ணிக்கும் முன்னாள் மாநகர் புள்ளி நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் எசகுபிசகாகச் சிக்கியிருக்கிறாராம். இது தொடர்பாக வழக்கும் பதியப்பட்ட நிலையில், உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறிய விசாரணைக் குழுவை அனுப்பியதாம் தலைமை. விசாரிக்க வந்தவர்களும், ‘விஷயம் விவகாரம்தான்’ என்று ரிப்போர்ட் கொடுத்தார்களாம். இப்போது,“விஷயத்தை ‘வளராமல்’ பார்த்துக்கொள்ளுங்கள்” என ஆளும் கட்சியின் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம் மாநகர் புள்ளி தரப்பு!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close